உயிரில்லா வாழ்த்துக்கள்...!
எங்கள் உயிர்த்
தலைவனுக்கு...!
உன் அனுமதியின்றி
இந்தக் கடிதத்தை
நாங்கள் எழுத....
அல்ல அல்ல...
வாசிக்க ஒரு காரணமுண்டு...!
கருப்பெனக்
கண்டதில்லை...
எங்களில் நீ
வெள்ளையெனக்
கண்டதில்லை...!
என்றும் சமம் தான்....
தீண்டல் வைத்தியத்தில்
இந்த
ஊமைச் சிறுவர்களையும்
பாடச்
செய்தவன் நீ...!
நினைவிருக்கலாம்.....
உன் விரல் நுனி
நிழல்
மேல்விழுந்த முதல்
தருணம்....
அன்று முதல்
இன்று வரை....
எங்கள்
தாயாய் தந்தையாய்
அரவணைப்பவன்
நீ....!
அனாதை,
எம்மையும் தத்தெடுத்து
தினம் தினம்
தட்டிக்கொடுத்து....
விரல் நுனியில் அடைக்கலம்
கொடுத்த
உன்னை இம்மண்ணில்
விதைத்த
அந்த இறைவனுக்கு
எமது நெஞ்சார்ந்த நன்றிகள்...!
கண்கள் இருந்தால் கலங்கிவிடுவோம்....
கைகள் இருந்தால் கூப்பிவிடுவோம்....
கவலை இல்லை....
நிச்சயம்
இதயம் உண்டு...
உன்னைப் படைத்த
இறைவனுக்கு
என்றென்றும் நன்றி சொல்ல....!
பிறர்
பார்வைக்கு உயிரற்று
இருப்பினும்...
தந்தை
உன் தீண்டலில்
உயிர்த்தெ(தொ)ழும்
உன்
பிள்ளைகள்....!
இன்றும் என்றும்
என்றென்றும்
இசையுடன் நீ
இசைய
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்......!
------------------------------ - piano கட்டைகள் !
-------------------------------- தாமரையான் !

