பாதப் பதிவுகள் இது வரை.....!

Friday, April 16, 2010

முதல் மூச்சு....!

இசைக்கும், இசையை ரசிக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் வணக்கம்.....!


மலர்ந்த மலர்களை வண்டுக்கு சொல்லத் தேவையில்லை...!

பறவைக்கு பறக்க திசையை நாம் உணர்த்தத் தேவையில்லை....!அதேபோல்...
புகழுக்கு கலைஞர்களை சுட்டத் தேவையில்லை.....
தம் திறமையே அவர்களுக்கு புகழ்ச்சியின் அடையாளம்....!

இந்த வார்த்தைகளுக்கெல்லாம்  இலக்கணமானவர் ....

இசையமைப்பாளர் திரு.நா.பாலபாரதி அவர்கள்...



கேரளத்தில்  திருவனந்தபுரம் நகரில் மே 18, 1962 ல் ஒலி கொடுத்து ஒளி பெற்று விழி திறந்தார்....!

வாழ்க்கையின் ஓட்டத்தில் தன்னை செலுத்தியவர் பின் உளவியில் துறையில் முதுகலை பட்டம் பெற்றார்....!

பின் இசைத்துறையில் "சித்திரப் பாவை" என்ற நெடும் தொடர்   மூலம் சின்னத்  திரையில்  கால் பதித்தார்.

 "சித்திரப் பாவை""செல்லம்மா""என் பெயர் ரெங்கநாயகி""மாங்கல்யம்" என ஏறக்குறைய 60 தொடர்களில் 
இவர் இசைப்பயணம் தொடர்ந்தது......
இசையெனும் வாடா மலர் மலர்ந்தது...!

பின் 1984 ல் கலைமகள் தனக்கான ஒரு சிறந்த படைப்பாளியை  "ஒரு யுகம்" என்ற வெள்ளித்திரைப் படத்தின் மூலம் 
தேர்ந்தெடுத்து உலகின் முன்னால் நிறுத்தினாள்......!

அந்த நாள் முதல் இன்று வரை தன் வெள்ளித்திரைப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் நம் இசைப் பிரியர்.

"அமராவதி","தலைவாசல்""பொறந்தாலும் ஆம்பளையா பொறக்கக் கூடாது""அசோக வனம்""சாசனம்""பொண்டாட்டியே தெய்வம்",
"கோல் மால்""மெர்குரி பூக்கள்""மகேசன்",... என இவர் இசையமைத்த படங்களின் பாடல்கள் இன்னும் காற்றின் மூலம் இசையால்  
இவர் புகழ் பாடுகின்றன என்பதில் ஐயமில்லை.....!

இசைப் பிரியர்கள் ஒவ்வொருவரும் இவர் படைப்புகளில் கண்டிப்பாக மூழ்க வேண்டும் என இசையன்னை சார்பில் எங்களின்
கனிவான சிறு விண்ணப்பம்....!

காற்றுக்கு திசை வரையருக்கும் வரை....
மழை நீர் மண்ணைச் சேராவரை....
இலை மேல் நோக்கி விழும் வரை....
இவர் இசைப் பயணம் தொடர 

இறைவனின் கட்டளை....!
எங்களின் வேண்டுகோள்....!

விரைவில் திரு.பாலபாரதி அவர்களின் அனைத்து படைப்புகளும் உங்களைச் சேர.....

தொலைவில் இருந்தாலும் தொடர்பில் இருங்கள் இசைத் தோழர்களே.....!


என்றும் இசையின் இனிமையுடன்....!
திரு.பாலபாரதி ரசிகர்கள்....!